"கறுப்பு பூனை" தலைவராவதில் முன்னாள் டி.ஜி.பிக்கு சிக்கல்
சென்னை:
தேசிய பாதுகாப்புப் படையான கறுப்பு பூனை படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள்டி.ஜி.பியான ராஜகோபாலன், அந்தப் பொறுப்பில் அமருவதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம், கறுப்பு பூனை படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகராஜகோபாலனை நியமித்தது. ஆனால், தமிழக அரசின் அனுமதியைப் பெறாமலேயே, இப்பதவிக்கு அவரைஅழைத்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
அவரை போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் இயக்குநர் பதவியிலிருந்து இன்னும் தமிழக அரசு விடுவிக்கவில்லை.இதனால், அவர் எப்போது கறுப்பு பூனை படையின் தலைவர் பதவியை எப்போது ஏற்பார் என்று தெரியவில்லை.
ஆனால், ஆகஸ்டு 1ம் தேதிக்குள் ராஜகோபாலன் அப்பதவியை ஏற்காவிட்டால், அது கை நழுவிப் போய்விடும்என்று கூறப்படுகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!