நாளை அரவிந்தரின் 129வது பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் விழா நாளை (புதன்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்த சுவாமிகளின் ஆஸ்ரமம் அமைந்துள்ளது. அமைதி தவழும் ஆசிரமம் அது. இங்குவருடா வருடம் ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அரவிந்தரின் 129வது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளஇந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை ஸ்ரீஅரவிந்தர் பயன்படுத்தி வந்த அறை தரிசனத்திற்காக திறந்துவிடப்படும்.

புதன்கிழமை நடைபெறவுள்ள ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாள் விழாவை சிறந்த வகையில் கொண்டாட ஆசிரமநிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற