இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: 4 மீனவர்கள் காயம்
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் கடலில் காணாமல் போன தங்கள் நண்பர்களைத் தேடிச் சென்றவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 4 தமிழக மீனவர்கள் காயமடைந்தனர்.
கடலில் மீன் பிடிக்கச்சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேர் திரும்பி வரவில்லை. இதனால் அவர்களைத் தேடிஅவர்களின் நண்பர்கள் 4 பேர் கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் தங்கள் நண்பர்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தஇலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது மரப்பலகையால் தாக்கியதுடன், துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இதில் 2 மீனவர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.
மேலும் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
மேலும் கானாமல் போன அந்த 4 மீனவர்கள் சென்ற படகு கச்சத் தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையில் கவிழ்ந்துவிட்டது. இதையடுத்து அவர்களையும் இந்த காயமடைந்த மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.
இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார்கூறினர்.












Click it and Unblock the Notifications