தமிழக மீனவர்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை
சென்னை:
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும்தமிழக அரசு எடுக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் சட்டசபையில் கூறினார்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து இலங்கை எல்லைக்குள் செல்லும்போது,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்திய எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி, இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தேவையானசிகிச்சையை அளிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார் ராஜேந்திர பிரசாத்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!