For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் அனுதாப அலையை நோக்கி ஜெ.?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு எதிராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த கட்டநடவடிக்ககைளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஜெயலலிதா.

அவர் முதன் முதல் முதல்வரான போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் தீவிரவாதிகளின்குண்டுக்கு பலியானார். அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ராஜீவ் கொல்லப்பட்டார் என்று எழுந்த அனுதாபஅலை, அவருடன் கூட்டணி வைத்திருந்த அதிமுகவுக்கு ஆதரவாக மாறியது.

அனைவரும் கை சின்னத்திற்கும், இரட்டை இலை சின்னத்திற்கும் முத்திரை குத்தினர். முதல்வரானார் ஜெ.

1991-1996வரை 5 ஆண்டு காலம் முதல்வராக இருந்தார் ஜெயலலிதா. ஆனால் 1996ல் வந்த தேர்தல் எதிர்ப்புஅலைகளை அள்ளி வீச, அவர் அத்தேர்தலில் தோற்றார்.

ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சரக சகாக்கள் மீதும் வழக்குகளைப் போட்ட திமுக, அவர்களைச் சிறையிலும்தள்ளியது. நீதிமன்றப் படிகளில் ஏறி, இறங்கி சலித்துப் போனார் ஜெயலலிதா.

ரெய்டு என்ற பெயரில் அவரது வீட்டிலிருந்த நகைகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டன. இனி நகையே அணியமாட்டேன். நகைகள் திரும்பி வந்தாலும் அதை விற்று ஏழைகளுக்கு செலவு செய்வேன் என்று அறிக்கைவிட்டார்ஜெ.

கருணாநிதி தொடர்ந்து ஜெயலலிதா மீது வழக்கு போட்டது, மக்கள் மனதில் சிறிது கசப்பை உண்டாக்கியது.இதையடுத்து, ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழல்கள் வரத் தொடங்கின.

இந்நிலையில் 2001 சட்டசபைத் தேர்தல் வந்தது. ஆனால், ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.இருப்பினும், ஜெயலலிதா அதைத் தனக்குச் சாதமாகவே பயன்படுத்திக் கொண்டார். "வேட்பு மனுக்களைநிராகரிக்கச் செய்து கருணாநிதி பழி தீர்த்துக் கொண்டார்" என்று மக்கள் மத்தியில் அனுதாப அலையைஏற்படுத்தினார்.

அனுதாப அலை அற்புதமாகவே வீசியது; சரித்திரம் திரும்பியது. எம்.எல்.ஏ. ஆகாமலே முதல்வரானார்ஜெயலலிதா. பழி வாங்க மாட்டேன் என்று கூறியிருந்தாலும், பழி வாங்கல் தானோ என்ற சந்தேகத்தை மக்கள்மத்தியில் எழுப்பும் விதமாக, கருணாநிதி கைது, திமுகவினர் மீது வழக்குகள், திமுக பேரணியில் வன்முறை எனநிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக நீடிக்கக்கூடாது என்று தொடரப்பட்டபொது நல வழக்கு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சின் முன் நடந்து வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு,ஜெயலலிதாவுக்குப் பாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் தற்போது நிலவுகிறது. ஜெயலலிதா என்ன செய்வார்என்று அனைவரும் ஜெயலலிதாவின் முடிவை நோக்கி காத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து தானாக ராஜினாமா செய்தாலோ, அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக்கூடாதுஎன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலோ அடுத்த முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்று அனைவரும்ஆவலோடு எதிர்பார்க்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது.

கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், சசிகலாவின் சகோதரர் மனைவி இளவரசிஆகியோரில் ஒருவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் கூறினாலும், தற்போது அமைச்சராகஇருக்கும் உப்பிலியாபுரம் சரோஜாவின் பெயரும் முதல்வர் பெயருக்கான பட்டியலில் சேர்ந்திருக்கிறது என்றுகூறப்படுகிறது.

தன் முதல்வர் பதவி போக நேர்ந்தால், அதையும் தனக்கு சாதகமான ஆயுதமாக மாற்ற முடிவு செய்துவிட்டார்ஜெயலலிதா. அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், தன் பதவி நீக்கத்தைக் கேடயமாக மாற்றமுடிவு செய்து விட்டார் ஜெயலலிதா.

"நீங்கள் என்னை உங்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தீர்கள். எதிர் கட்சியினர் சதி செய்து என்னைப் பதவியிலிருந்துஇறக்கிவிட்டார்கள்" என்று மக்களிடம் முறையிட்டு அவர்கள் அனுதாபத்தைப் பெற்று, உள்ளாட்சி தேர்தலிலும்அமோக வெற்றி பெற ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் அரசியல் சூடு பிடித்துவிட்டது. பல கட்சிகளின் காட்சிகள் அரசியல்அரங்கத்தில் அரங்கேற காத்திருக்கின்றன என்று மட்டும்தான் இப்போதைக்குக் கூற முடியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X