புஷ்-வாஜ்பாய் தொலைபேசியில் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் பேசினார்.

நேற்று இரவில் புஷ்ஷிடம் இருந்து வாஜ்பாய்க்கு இந்த அழைப்பு வந்தது. சுமார் 10 நிமிடங்கள் இருதலைவர்களும் பேசிக் கொண்டிருந்தனர்.

தலிபான் தீவிரவாதிகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் புரியும் எனவாஜ்பாய் புஷ்ஷிடம் உறுதியளித்தார்.

சர்வதேச அளவில் இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனவும் இரு தலைவர்களும்உறுதி பூண்டனர்.

அமெரிக்கா மீது நடந்த விமானத் தாக்குதல்களுக்குப் பின் புஷ்-வாஜ்பாய் பேசுவது இதுவே முதல் முறையாகும்.புஷ்ஷிடம் இருந்து அழைப்பு வருவதற்கு முன் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்மில் வாஜ்பாயைநேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அமெரிக்காவுக்கு முழு அளவில் உதவத் தயாராக இருப்பதற்கு இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக வாஜ்பாயிடம்புஷ் கூறினார். இந்தியாவிலும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட அமெரிக்கா உதவும் என்றும் கூறினார்.

சீக்கியர் கொலை:

அரேபியர்கள் என நினைத்து சீக்கியர்கள் மீது அமெரிக்காவில் தாக்குதல் நடந்து வருவது குறித்து புஷ்ஷிடம்குறிப்பிட்ட வாஜ்பாய் உடனே அதைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அடிக்கடி உங்களிடம் பேசுவேன் என வாஜ்பாயிடம் புஷ் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு உதவபாதுகாப்புத்துறை ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவை மீண்டும் வாஷிங்டனுக்கு அனுப்பி வைப்பதாக வாஜ்பாய்கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற