தலிபான் ஆட்சியாளரை சந்திக்கிறார் ஐ.எஸ்.ஐ. தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காண்டஹார்:

இப்போது ஆப்கானிஸ்தானில் பேச்சு நடத்தி வரும் பாகிஸ்தான் குழுவுக்கு அந் நாட்டு உளவுப் பிரிவானஐ.எஸ்.ஐயின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மெஹ்மூத் அகமத் தான் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த அமைப்பு தான் தலிபான்களுக்கு ராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. தலிபான்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

இப்போது அமெரிக்காவால் மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் வேறு வழியில்லாமல்தலிபான்களிடம் பேசி ஒசாமா பின் லேடனை ஒப்படைத்துவிடுமாறு கேட்டு வருகிறது.

தலிபான் ஆட்சியாளரான முல்லா முகம்மத் ஒமரையும் ஜெனரல் மெஹ்மூத் சந்திக்க உள்ளார்.

இந் நிலையில் தனது நாட்டு இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் ஒமர் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தக்கூட்டத்துக்குப் பின் உலக அளவில் மதப் போர் தொடுக்குமாறு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஒமர் அழைப்புவிடுப்பார் என்று தெரிகிறது. பின் லேடனை ஒப்படைக்கக் கோரும் பாகிஸ்தான் குழுவுக்கு தலிபான்கள் கடும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தனது இள நிலை கமாண்டர்களை குடும்பத்தினருடன் தலைநகர் காபூலில் இருந்து வெளியேறிவிடுமாறு ஒமர்உத்தவிட்டுள்ளார்.

இந் நிலையில் உங்களுக்கு உதவ வேண்டுமானாலும் நாங்கள் உங்களுக்கு செலுத்த வேண்டிய 30 பில்லியன் டாலர்கடனை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரி வருகிறது. அதே நேரத்தில்ஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தான் படைகளை வழங்காது எனவும் கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற