பின் லேடனை ஒப்படைக்க தலிபான்கள் நிபந்தனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

காண்டஹார்:

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஆப்கானிஸ்தான் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது குறித்து ரஷ்யாவின் இடார்-டாஸ் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:

பின்லேடனை ஒப்படைக்க முடியாது என்று வந்த தலிபான்களின் நிலையில் மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளது.தங்களுக்கு ஆயுத உதவி அளித்து வரும் பாகிஸ்தானே அமெரிக்க நெருக்குதலுக்குப் பணிந்து தங்களை கைவிடப்போவதை தலிபான்கள் உணர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து ஆப்கானிஸ்தானை அமெரிக்காவின் பயங்கர தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ளதலிபான்களின் ஒரு பிரிவினர் முடிவெடுத்துள்ளனர்.

ஆனால், ஆப்கானிஸ்தானின் மதத் தலைவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

தலிபான்கள் விதித்துள்ள நிபந்தனைகள்:

1. பின் லேடனை நடுநிலை நாடு ஒன்றில் வைத்து விசாரிக்க வேண்டும்.

2. தலிபான்களுக்கு எதிராகப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு ஆயுதங்கள் வழங்குவதைரஷ்யா உள்ளட்ட நிறுத்திக் கொள்ள வேண்டும்.

3. ஆப்கானிஸ்தான் மீதான் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்

இந்த நிபந்தனைகளை அமெரிக்காவிடம் எடுத்துக் கூறி அவர்களின் பதிலை கேட்டு வருமாறு பாகிஸ்தானிடம் தலிபான்ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதுக் குழுவினரிடம் தலிபான்கள் இந்த நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்குமா என்பது ஒருபுறம் இருக்க, மதத் தீவிரவாதிகளை மீறி பின்லேடனை தலிபான்களால்அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியுமா என்பது தெரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற