இந்திய விமான தளங்களை அமெரிக்கா பயன்படுத்த காங்., வி.எச்.பி எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய மண்ணில் இருந்து வெளிநாடுகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கக் கூடாதுஎன்று காங்கிரஸ் கட்சியும், விசுவ ஹிந்து பரிஷத்தும் கூறியுள்ளன.

ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க மறுக்கும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது.

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமான தளங்களை அமெரிக்கப்படை பயன்படுத்திக்கொள்ளஅந்நாடு அனுமதி வழங்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.

இதற்கு பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் இந்தியாவின் விமான படைத்தளங்களையும் பயன்படுத்த அமெரிக்கா விரும்பினால் அதற்குஇந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங் மற்றும் தேவகவுடா போன்றவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி கூறியதாவது,

இற்திய மண்ணை அன்னிய சக்திகள் போர்க்களமாகப் பணன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ்விரும்புகிறது.

மேலும் இது பற்றி அமெரிக்கா இன்னும் இந்தியாவிடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. அவ்வாறு அமெரிக்காவேண்டுகோள் விடுத்தால் பிரதமர் ாவஜ்பாய் மீண்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அனைத்துக் கட்சியினரிடமும் கலந்தாலோசித்த பிறகுதான் இதுபற்றிய முடிவை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிஅந்தக் கூட்டத்தில் தனது கருத்தை தெரிவிக்கும்.

மேலும் இந்தப்பிரச்சனை பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் கட்சித் தலைவி சோனியா காந்திதலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) அல்லது நாளை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல விசுவ இந்து பரிஷத் தலைவர் அசாக் சிங்கால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்க வேண்டும்.ஆனால் ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்க இந்திய விமானப் படைத்தளங்களை அமெரிக்கப்படையினர்பயன்படுத்த இந்தியா ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இப்போதுள்ள சூழ்நிலையில் எந்நேரத்திலும் இந்தியா மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம். தீவிரவாதிகளின்இதுபோன்ற சதித் திட்டங்களிலிருந்து நாட்டு மக்களைக் காப்பதில் அரசு விழிப்புடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற