அடுத்த முதல்வர் - அமைச்சர்களுடன் ஜெ. இன்று ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்குஎதிராக சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்புக் கூறப்பட்டால் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி இந்தக் கூட்டத்தில்ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஊழல் வழக்கில் நிறைதண்டனை பெற்ற முதல்வர் ஜெயலலிதா முதல்வர் பதவியில் நீடிப்பது செல்லாது என்று சுபரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.

அந்தத் தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிரானதாக இருந்தால், அவர் தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியாதநிலை ஏற்படும்.

இந்நிலையில் அடுத்த முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று இன்று (செவ்வாய்கிழமை) நடக்கும்அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காவிரி நீர்ப்பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டை அனுகுவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில்விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமைச்சர்கள் அனைவரும் தங்கள் தலைவியின் கட்டளைப்படி உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கவனிக்கச்சென்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற