தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராகிறார் வேளாண் விஞ்ஞானி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக திட்டக் கமிஷன் துணைத் தலைவராக பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வர் ஜெயலலிதா அரசின் திட்டங்கள் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும், அரசின் திட்டங்கள்மேம்பாடு அடையவும், திட்டக் கமிஷனை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கும் கமிஷன் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தலைவராக முதல்வர்ஜெயலலிதாவும், துணைத் தலைவராக எம்.எஸ்.சுவாமிநாதனும் இருப்பார்கள்.

உறுப்பினர்களாக டி.வி.அந்தோணி, ராஜம்மாள் தேவதாஸ், டாக்டர் லலிதா காமேஸ்வரன், டாக்டர் வசந்தி தேவி, ராமச்சந்திரன்,டாக்டர் சங்கர் ஆகியோர் இருப்பார்கள்.

இந்த மாற்ற உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற