போலீஸ் சங்கமா? - "நோ" என்கிறார் டிஜிபி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தமிழகத்தில் காவலர்களுக்கு சங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது என்று மாநில டிஜிபி ரவீந்திரநாத்கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மதுரை, திருச்சி,நாகர்கோவில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் விவாதித்துள்ளேன்.

காவலர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதில் அவர்களது குறைகள் என்னஎன்பது குறித்து அறிந்து அவற்றை உடனடியாகத் தீர்த்து வைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையில் புதிதாக காவலர்கள் நியமனம் செய்யப்படும்போது, காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

அமெரிக்காவைத் தாக்கிய தீவிரவாதி பின் லேடனால் சென்னைக்கு ஆபத்து நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.இதனால் சென்னை நகருக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம், தூதரக அதிகாரிகளின் வீடுகள் ஆகியவற்றிற்கும் போதுமான பாதுகாப்புகள்கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற