மீண்டும் நனைந்தது சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கன மழை பெய்தது. காலை வரையிலும் இந்த கன மழை நீடித்தது.

சென்னை நகரில் தொடர்ந்து கடுமையான வெயில் அடித்து வருகிறது.

இருப்பினும் அவ்வப்போது கன மழை பெய்து சென்னை மக்களை இன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பேய்மழை பெய்து சென்னை மக்களைக் குளிர்வித்தது.

அதேபோல, திங்கள்கிழமை நள்ளிரவுக்கு மேல் 3 மணியளவில் கன மழை பெய்யத் தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்தஇந்த மழை காலை 6 மணி வரையிலும் நீடித்தது.

இந்தத் திடீர் இரவு நேர மழையால் சென்னை நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. பல தாழ்வானபகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது.

மழை நின்றபோதிலும் கூட லேசான தூறல் இருந்த வண்ணம் இருக்கிறது. எனவே செவ்வாய்க்கிழமையும் லேசான மழைஇருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற