ஜெ. புறக்கணிப்பு... சோனியாவிடம் இளங்கோவன் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குக் காங்கிரஸுக்குஅழைப்பு அனுப்பாதது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறியிருப்பதாக தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.

டெல்லி சென்றிருந்த இளங்கோவன் செவ்வாய்க்கிழமை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிடும். வெற்றி வாய்ப்புள்ள இடங்கள் குறித்துதேர்வு செய்து வைத்துள்ளோம்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்துசெவ்வாய்க்கிழமை மாலைக்குள் தெரிந்து விடும்.

ஜெயலலிதா கூட்டிய கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கு காங்கிரஸிற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதுகுறித்துகட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறியுள்ளேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற