காலி பானைகளுடன் வைகோ இன்று போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமைஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை நகரில் நிலவி வரும் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்கவும், சென்னை நகரில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்கவும் கோரி மதிமுக சார்பில் சென்னைஅரசினர் விருந்தினர் மாளிகை முன்பு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

காலை 9 மணியளவில் அண்ணாசாலையிலிருந்து கிளம்பி விருந்தினர் மாளிகை முன்பு வைகோ தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் காலி பானைகளுடன் மதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற