விருந்தாளி பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்: தலிபான் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

பின்லேடனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் எங்களின் கடும் தாக்குதலை சந்திக்க வேண்டிவரும் என ஆப்கானிஸ்தானை அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது குறித்து தனது மத குருமார்களைக் கூட்டி தலிபான் அரசுவிவாதித்தது.

கூட்டத்தில் பின் லேடனை தானாகவே நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்வது என மத குருமார்கள்முடிவெடுத்தனர். ஆனால், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என அறிவித்தனர்.

இதனால் அமெரிக்கா வெறுத்துப் போய் உள்ளது. ஆப்கானிஸ்தானை கடுமையாகத் தாக்க தயாராகி வருகிறது.

இந் நிலையில் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டுத் தூதர் கூறுகையில், எங்கள் நாட்டுக்குவிருந்தாளியாக வந்துள்ள பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது. விருந்தாளியியை எதிரியிடம்பிடித்துக் கொடுப்பது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற