சென்னை:
சென்னையில் 13 வருடமாக போலி டாக்டராக சேவை புரிந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த பலே போலி டாக்டரின் பெயர் ரவீந்திரன். பி.ஏ. படித்த பட்டதாரி. வேலையில்லாமல் இருந்து வந்தார்.இவரது சொந்த ஊர் ஈரோடு.
வேலை தேடி வந்த அவர் மேட்டூர் அணைக்கு அருகேயுள்ள ஒரு கிளினிக்கில் கம்பவுண்டராக சேர்ந்தார்.டாக்டர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் அவர் மெதுவாக கற்றுக் கொண்டார்.
டாக்டர் இல்லாத நேரத்தில் இவரே டாக்டராக மாறி வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இதையடுத்து டாக்டராகதனித்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை மனதில் வந்ததும், பெரிய அளவில் தொழிலை ஆரம்பிப்போம் என முடிவுசெய்து, சென்னைக்கு வந்தார்.
வண்ணாரப்பேட்டையில் தனது கிளினிக்கை திறந்தார். தனது பெயர்ப் பலகையில் பெயருக்குப் பின்னால்பி.எஸ்.சி., எம்.பி.பி.எஸ். என்று போட்டுக் கொண்டார். இந்த டாக்டரின் தொழில் கடந்த 13 வருடங்களாக தங்குதடையின்றி அமோகமாக இருந்து வந்தது.
இந்த நிலையில்தான போலீஸாருக்கு இவர் குறித்து தகவல் போயுள்ளது. ரவீந்திரன் உண்மையான டாக்டர்இல்லை. போலி டாக்டர் என்று அந்த தகவல் கூறியதால் போலீஸ் படை ரவீந்திரனின் கிளினிக்கிற்கு விரைந்தது.
போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திர பாபு, மவுரியா ஆகியோர் தலைமையிலான தனிப் படை அங்கு விரைந்துவந்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்தியது. அப்போதுதான் ரவீந்திரன் குறித்த உண்மைகள் தெரிய வந்தன.இதையடுத்து அவரது போலி கிளினிக்கில் இருந்து மருந்துகள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த நபர், ஒரு அதிகாரியின் மகளை ஏமாற்றி, தான் டாக்டர் என்று கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார்என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!