வந்தாச்சு உள்ளாட்சித் தேர்தல்... வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை துவங்கியது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான முறையான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் எம்.எஸ்.பாண்டியன்திங்கள்கிழமை வெளியிட்டார். இதையடுத்து வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

செய்தியாளர்களிடம் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாண்டியன் கூறுகையில், சட்டசபைத் தேர்தலில்கடைப்பிடிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்றார்.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான புத்தகத்தையும் அவர் அப்போது வெளியிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது.இத்தேர்தலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால் தேர்தலை நடத்தத் தடையில்லை என்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி தேர்தல்நடக்கவுள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடக்கிறது. இதில் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் வேட்புமனுத்தாக்கல் நடைபெறாது.

அக்டோபர் 3ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 5ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் வாங்கிக்கொள்ள வேண்டும். அக்டோபர் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

வாக்குகள் அக்டோபர் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 25ம் தேதி புதிய உறுப்பினர்கள்பதவியேற்பார்கள்.

தேர்தல் நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகள் குறித்த பட்டியல்:

மாநகராட்சிகள்: 6.
நகராட்சிகள்: 102.
பேரூராட்சிகள்: 636.
மாவட்ட பஞ்சாயத்துக்கள்: 649.
மாவட்ட பஞ்சாயத்து யூனியன்கள்: 6505.
கிராமப் பஞ்சாயத்துக்கள்: 12,618.
கிராமப் பஞ்சாயத்து வார்டுகள்: 97,512.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற