இது இஸ்லாமுக்கு எதிரான போராட்டம் அல்ல- ஐரோப்பிய யூனியன் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தீவிரவாதத்துக்கு எதிரான இந்தப் போராட்டம் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான போராட்டம் அல்ல என ஐரோப்பியயூனியன் கூறியுள்ளது.

மேலும் பின்லேடன் குறித்து பாகிஸ்தான் தன்னிடம் உள்ள ரகசிய தகவல்கள், அவரது நடமாட்டம் குறித்தஉளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காவிடம் வழங்க வேண்டும் எனவும் இந்தக் குழு பாகிஸ்தானைவலியுறுத்தியுள்ளது.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவு திரட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு ஐரோப்பியயூனியனின் தூதுக் குழு அதன் வெளியுறவுத்துறை கமிஷ்னர் கிரிஸ் பேட்டன் தலைமையில் பயணம்மேற்கொண்டுள்ளது. பயணத்தின் தொடக்கமாக செவ்வாய்க்கிழமை இக் குழு இஸ்லாமாபாத் வந்திறங்கியது.

இவர்கள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.இந்தப் போரினால் ஏற்படப் போகும் ஆப்கானிஸ்தானின் சமூகப் பிரச்சனைகள் குறித்தும் பாகிஸ்தானின்பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும் இக் குழு விவாதித்தது.

பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்து உதவ வேண்டும், ரகசியதகவல்கள் அனைத்தையும் தந்து உதவியாக வேண்டும் என இக் குழு நிபந்தனை விதித்தது. ஐரோப்பிய கமிஷனின்பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை கொள்கை வகுப்புப் பிரிவின் செயலாளர் ஸேவியர் சொலானாஇதனை பாகிஸ்தானிடம் எடுத்துக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஐரோப்பியக் குழுவின் தலைவர் கிரிஸ் பேட்டன் கூறுகையில், தீவிரவாதத்துக்குஎதிரான இந்தப் போராட்டத்தை இஸ்லாமுக்கு எதிரான போராட்டம் என்பது போல காட்ட பின்லேடனும்தலிபான்களும் முயல்கின்றனர்.

இஸ்லாத்தில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை. இந்தத் தீவிரவாதிகள் தான் இஸ்லாத்தை மீறியுள்ளனர் என்றார்.

பாகிஸ்தானில் இருந்து பின் லேடனுக்கு செல்லும் நிதியையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்இந்தக் குழு கூறியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற