ஆப்கன் அகதிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் அகதிகளை மீண்டும் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லைக் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கானஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசு மறுத்ததைத் தொடர்ந்து, எந்த நேரமும் அமெரிக்காவின் தாக்குதலுக்குஉள்ளாகலாம் என்ற நிலையில் உள்ளது ஆப்கன்.

"காணாமல்" போன பின் லேடனும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில்தான் பதுங்கியிருப்பதாகத் தகவல்கள்கூறுகின்றன. அமெரிக்கா தாக்குதல் நடத்தும்போது, அவரே தலிபான் படைகளுக்குத் தலைமை தாங்கி பதில்தாக்குதல் நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைக் கதவுகளைத் திறந்துள்ளது பாகிஸ்தான். இதையடுத்து எல்லைப்பகுதியில் குவிந்திருந்த லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்குள் அகதிகளாகக் குவியஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே உள்நாட்டுப் போரினாலும், வறுமையின் கொடுமையாலும் ஆப்கானியர்கள் தங்கள் நாட்டை விட்டுவெளியேறி, பாகிஸ்தானில் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர்.

இதுவரை கிட்டத்தட்ட 23 லட்சம் ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானில் உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவும் விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளது என்பதை உணர்ந்து, அதிக அளவில் அவர்கள்வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், பாகிஸ்தான் தன் எல்லைப் பகுதியை மூடியிருந்தது.

இதைத் தொடர்ந்து, ஆப்கனை விட்டு வெளியேற முடியாமல் ஆப்கன் அகதிகள் தவித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், இந்த அகதிகளுக்குத் தேவையான உணவு முதலான தேவைகளை ஏற்றுக் கொள்வதாக ஐ.நா.தெரிவித்ததையடுத்து, பாகிஸ்தான் மீண்டும் எல்லைக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான ஆப்கன் அகதிகள் பாகிஸ்தானுக்குள் வந்து குவிய ஆரம்பித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற