ஆப்கனுடன் உறவை முறித்தது சவுதி அரேபியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

துபாய்:

ஆப்கானிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்து விட்டது.

பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்காத காரணத்திற்காக, 3 நாட்களுக்கு முன்னர்தான் ஐக்கிய அரபுநாடுகள் (யு.ஏ.இ.) தாலிபன் அரசுடனான தன்னுடைய உறவுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இதையடுத்து, சவுதி அரேபியாவும் ஆப்கனுடனான தன்னுடைய உறவுகள் அனைத்தையும் முறித்துக் கொள்வதாகஅறிவித்துள்ளது.

இதனால், தற்போது பாகிஸ்தான் மட்டுமே ஆப்கனுடன் உறவு வைத்துள்ளது. ஆனாலும் அது நல்லுறவா என்பதுசந்தேகமே.

ஏனென்றால், ஆப்கனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் அனைவரும்பாகிஸ்தானுக்கே திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற