ஆப்கனில் உள்ள ஐ.நா. அலுவலர்களுக்கு தாலிபன் கொலை மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காபூல்:

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகங்களில் பணிபுரிவர்கள், அங்குள்ள தகவல் தொடர்பு சாதனங்களைப்பயன்படுத்தினால், அவர்களைக் கொல்லப் போவதாக, தாலிபன் அரசு மிரட்டியுள்ளது.

காபூல், காண்டஹார் போன்ற நகரங்களில் உள்ள ஐ.நா. அலுவலகங்களைக் கடுமையாகச் சோதனையிடத்தொடங்கியுள்ளது தாலிபன் அரசு.

மேலும், அங்குள்ள தகவல் தொடர்பு சாதனங்களான டெலிபோன்கள், வாக்கி-டாக்கிகள், கம்ப்யூட்டர்கள் உள்படபல சாதனங்களைச் செயல்பட விடாமல் தாலிபன் முடக்கி வைத்துள்ளது.

"இவற்றைப் பயன்படுத்தினால், கொன்று விடுவோம்" என்றும் தாலிபன் அரசு, ஐ.நா. அலுவலர்களைமிரட்டியுள்ளது.

ஆப்கனில் தற்போது உள்நாட்டுச் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது. நார்த்தர்ன் அல்லையன்சுக்கும் தாலிபன்படையினருக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.

இதனால், சண்டை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.இவற்றை அப்புறப்படுத்தும் பணியில்தான் ஐ.நா. அலுவலர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற