நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்- நிபுணர்கள் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று இரவு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் லேசானதுதான் என்றும், இதனால் பொதுமக்கள்பீதியடையவேண்டாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையில் தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், வேளச்சேரி ஆகிய முக்கிய இடங்களில் லேசானநிரநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அடுக்குமாடிக்கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் லேசான அதிர்ச்சி ஏற்பட்டது. மேலும் சில வீடுகளில்கீறல்களும் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளைவிட்ட வெளியேறி சாலைகளிலும்,தெருக்களிலும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி பட்நாகர் கூறியதாவது,

சென்னையில் பல்வேறு பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரிபோன்ற இடங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மேலும் தற்போது பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான அறிகுறிகள்எதுவுமில்லை. எனவே பொதுமக்கள் யாரும் இதுகுறித்துப் பீதியடையவேண்டாம் என்று கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற