போர் எதிரொலி: இந்திய சர்வதேச திரைப்பட விழா ரத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த சர்வதேச திரைப்பட விழா ரத்துசெய்யப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெங்களூரில் சர்வதேச திரைப்படவிழா நடைபெறுவதாக இருந்தது.

அமெரிக்கா ஆப்கன் மீது போர் தொடுக்கும் நிலை உள்ளதால் உலக நாடுகள் சர்வதேசநாடுகள் இந்த திரைப்படவிழாவில் கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளதால்சர்வதேச திரைப்பட விழா ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் ஒலி பரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில், மூத்தஅதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சர்வதேச திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசு அங்கு கடும்வறட்சி நிலவி வருவதால் சர்வதேச திரைப்பட விழாவை பெங்களூரில் நடத்தமுடியாது என்று தெரிவித்திருந்தது.

தகவல் ஒலி பரப்புத்துறை கூட்டத்தில் கர்நாடகாவில் வறட்சி நிலவி வருவதால் அங்குசர்வதேச திரைப்படவிழாவை நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்தும்விவாதிக்கப்பட்டது.

திரைப்பட விழா இயக்குனரகமும், தற்போது இந்திய பகுதியில் நிலவி வரும்பதட்டமான சூழ்நிலை காரணமாக உலக நாடுகள் சர்வ தேச திரைப்பட விழாவில்பங்கேற்பதும் கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. இவைஎல்லாவற்றையும் கருத்தில் கொண்டு சர்வ தேச திரைப்பட விழாவை ரத்து செய்வதுஎன்று முடிவு செய்யப்பட்டது.

திரைப்பட விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைப்பது முடியாது. ஏனென்றால் சர்வதேசதிரைப்பட விழாவை நடத்துவதற்கென்று சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள்சங்கம் குறிப்பிட்ட நாளைத் தவிர வேறு எந்த நாளிலும் நடத்த முடியாது என்று அந்தசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருநத்தது.

ஆனாலும் இந்தியன் பனோரமா திரைப்படங்களையும், திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக வந்துள்ள அயல் நாட்டு திரைப்படங்களையும் வேறொரு இடத்தில்தக்க சமயத்தில் திரையிட வழிமுறை செய்யப்படும் என்றும் அந்த செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற