உள்ளாட்சி தேர்தல்... இதுவரை 19,000 பேர் வேட்பு மனுத்தாக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை 19,000க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கியது முதல் நாளில் சரியாகஇல்லாத வேட்பு மனுத்தாக்கல், அடுத்த நாள் விறுவிறுப்படைந்தது.

தற்போது இதுவரை 19,000க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு 2 பேர் வரை மட்டுமே இதுவரை வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளனர். நகராட்சித் தலைவர் பதவிக்கு இதுவரை 12 பேர் வரை மட்டுமேவேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், உறுப்பினர்கள்பதவிக்கு மட்டுமே அதிகளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் முழுமையாக தங்களது வேட்பாளர் பட்டியலைவெளியிடாததால், வேட்பு மனுத்தாக்கலில் மந்த நிலை காணப்பட்டது. இன்னும்இரண்டு நாட்களில் இது மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற