மதுரை வங்கியில் கொள்ளையடித்த 2 இலங்கை தமிழர்கள் பெங்களூரில் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

மதுரை வங்கியில் ரூ.65 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியாகிதலைமறைவாக இருந்த 2 இலங்கை தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

1988ம் ஆண்டு மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரூ.65 லட்சத்தைகொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 3 பேரையும், சுந்தர், பிண்டோ ஆகிய இரண்டுஇலங்கை தமிழர்களையும் 1990ம் ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில காலம் கழித்து இவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். ஜாமீனில் வெளிவந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.இவர்களை மதுரை போலீசார் தீவிரவாக தேடி வந்தனர்.

இந்நிலையில் சுந்தர், பிண்டோ ஆகிய இருவரையும் பெங்களூர் மடிவாளாவிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில்உள்ள கிராமத்தில் மடிவாளா போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்ட விவரம் மதுரை போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை போலீசார்பெங்களூர் வந்து சுந்தரையும், பிண்டோவையும் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற