நில அதிர்வு அனுபவம் பற்றி நடிகர் கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நில அதிர்வு பற்றி நடிகர் கமல்ஹாசன் தன் அனுபவம் பற்றிநிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்றபட்ட நில அதிர்வின்போது பொதுமக்கள் பீதியடைந்துவீடுகளைவிட்டு வெளியேறினர். சிலர் இரவு முழுவதும் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் படுத்துஉறங்கினார்கள்.

இந்த நில அதிர்வுபற்றி நடிகர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில்,

நான்,என்மனைவி சரிகா, என் மகள்கள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென்றுசாப்பாட்டு மேஜையும், நாற்காலிகளும் ஆடஆரம்பித்தன. வீடும் லேசாக குலுங்கியது.

நான் ஏற்கனவே பத்திரிக்கைகளிலும், டிவியிலும் நிலநடுக்கம் பற்றி அறிந்திருக்கிறேன். உடனே நான் அது நிலநடுக்கம்தான் என்று முடிவுசெய்து, அனைவரும் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னேன்.

பிறகு என் மனைவி வேகமாக நடக்க முடியாததால் (முதுகுத்தண்டில் அடிபட்டு சிகிச்சைபெற்று வருகிறார்),அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு விரைந்து வீட்டைவிட்டு வெளியேறினோம்.

அந்த அவசரத்திலும் யாருடனாவது தொடர்புகொள்ள உதவுமே என்று செல்போனை எடுத்துக்கொண்டுவெளியேறினேன்.

பிறகு சில நண்பர்களிடம் போனில் தொடர்புகொண்டு, நடந்தது நிலஅதிர்வுதான் என்றுஉறுதிப்படுத்திக்கொண்டேன்.

மேலும் நிலஅதிர்வின் அளவு ரிக்டர் ஸ்கேலில் 5.6 ஆகப் பதிவாகியிருந்தது என்றதும், 6க்கு மேல் போனால்தான்பாதிக்கும் என்பதை புரிந்துகொண்டு அனைவரும் வீட்டுக்குள் சென்று தூங்கிவிட்டோம் என்றார்.

இதேபோல சரத்குமாரும் ராதிகாவும் காரில் வந்துகொண்டிருந்தபோது, நிலஅதிர்வை ஏற்பட்டுள்ளதைஅறிந்துள்ளனர்.

நடிகர் வடிவேலு காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

அப்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டவுடன், ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டே மருத்துவமனையைவிட்டுவெளியேறியிருக்கிறார்.

நடிகை தேவயானியும் அவரது கணவரும் சாந்தம் தியேட்டரில் "லகான்" படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதுநிலஅதிர்வை உணர்ந்ததாகக் கூறினார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற