அடை மழையில் நனைகிறது சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் அடை மழை பெய்து வருகிறது. புதன்கிழமை நள்ளிரவு துவங்கியமழை காலை 9 மணி வரை நிற்கவில்லை.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை பலமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரிமுதல் தலைநகர் சென்னை வரை கன மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரிமாவட்டம் மழை காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையிலும் கன மழை பெய்து வருகிறது. நில அதிர்ச்சி கொடுத்தஅதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத சென்னை மக்கள் தற்போது மழையில் நனைந்துவருகின்றனர்.

புதன்கிழமை நள்ளிரவுக்கு மேல் பெய்யத் துவங்கிய மழை தொடர்ந்துபெய்து வருகிறது. கன மழையாக இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து பலமான மழைபெய்து வருகிறது.

இதன் காரணமாக காலையில் அலுவலகம் செல்வோர் மிகுந்த அளவில்பாதிக்கப்பட்டனர். தற்போது பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து விடுமுறைவிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மழையினால் பாதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தென் மேற்கு பருவ மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கலாம்என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற