பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசு உதவித் தொகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ஏற்பட்ட நில அதிர்ச்சி காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கும்என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக, பார்த்தசாரதி என்ற 10ம் வகுப்புமாணவனும், 60 வயது பெண்மணி ஒருவரும் அதிர்ச்சியில் கீழே விழுந்து இறந்தனர்.

இந்த 2 பேருக்கும் அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று பன்னீர் செல்வம் புதன்கிழமைகூறியுள்ளார்.

நில நடுக்கம் காரணமாக, பாண்டிச்சேரியிலும் ஒரு டிரைவர் மாரடைப்பால் இறந்து போனார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற