சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெள்ளைக்காரர்கள் இந்தியாவிற்கு வரும் முன் சென்னை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர்,திருவொற்றியூர் என்ற சில கடலோரக் கிராமங்களே இருந்தன. இவை இருந்தாலும் கூட இவற்றிற்கிடையே பெரும் வனாந்திரப் பகுதிகளேஇருந்ததால், இவை ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் தனி ஊர்களாக இருந்து வந்தன.

இந்தப் பகுதிகளில் மயிலாப்பூர்தான் முதலில் முன்னேற்றத்தைக் கண்டது. அதற்குக் காரணம் போர்ச்சுகீசியர்கள். 1520-ல் மயிலாப்பூர் கடற்கரையில்கால் வைத்த அவர்கள் மயிலாப்பூரில் சாந்தோம் பகுதியில் குடியேறினர். அவர்களது குடியிருப்புகள் அங்கு எழுந்தன.

பிறகு படிப்படியாக திருவல்லிக்கேணி பகுதியில், காடுகள் மறைந்து மக்கள் குடியிருப்புகள் பெருகின.

இவ்வாறாக வளர ஆரம்பித்த சென்னை இன்று தென் பகுதியில் தாம்பரம் வரையிலும், வட பகுதியில் பூந்தமல்லி வரையிலும் வியாபித்து இந்தியாவின்நான்காவது பெருநகரமாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.

இந்தியாவின் கவர்னராக எலிஹூ இருந்தபோதுதான் மேற்கத்திய முறையில் இந்தியாவில் முதல் மருத்துவமனை எழுந்தது. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ்கோட்டையில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை பெரிய அளவில் வசதிகள் இல்லாவிட்டாலும் கூட இந்தியாவின் முதலாவது நவீன வசதிகள் கொண்டமருத்துவமனையாக திகழ்ந்தது. மருத்துவமனையை அமைத்த எலிஹூ, இந்தியாவின் முதலாவது மாநகராட்சி நிர்வாகத்தை சென்னையில் நிர்மாணித்தார்.

1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இந்த மாதம் 29ம் தேதியுடன் சென்னை மாநகராட்சிக்கு 313வயதாகிறது. இந்தியாவின் மூத்த மாநகராட்சி இது என்பது தமிழகத்திற்குப் பெருமை தரக் கூடியது.

சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் ஆகும். மொத்த மக்கள் தொகை 1991ம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின்படி 38,41,398 ஆகும். மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 19,710 பேர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்டபகுதியில் உள்ள சாலைகளின் எண்ணிக்கை 11,659.

பஸ்கள் செல்லக் கூடிய சாலைகள் 435.

புறநகர் வரை செல்லக் கூடிய சாலைகள் 11,225.

சென்னையில் உள்ள பாலங்களின் எண்ணிக்கை 78. பெரிய பாலங்களின் எண்ணிக்கை 3.

சுரங்கப் பாதைகளின் எண்ணிக்கை 17.

சென்னை நகரில் மொத்தம் 155 வார்டுகள் உள்ளன. தற்போதைய மேயராக இருப்பவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்திலேயே மிகப் பெரிய மாநகராட்சிசென்னைதான். தமிழகத்தின் வெள்ளை மாளிகை என அழைக்கப்படும் ரிப்பன் கட்டிடத்தில்தான் சென்னை மாநகராட்சி இயங்கி வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற