இன்று மாலை உருவாகிறது காங்கிரஸ் மெகா கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அறிவிக்கும் என்றுஅகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவை காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. புதியதமிழகம், மக்கள் தமிழ் தேசம் போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வரவுள்ளன.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியுடன் எந்த எந்த கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளவிருக்கின்றன என்பதுகுறித்தும் இட ஒதுக்கீடு குறித்தும் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் என்று ரமேஷ் சென்னிதாலாதெரிவித்தார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தற்போது சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவை எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது.

தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனும், அக்கட்சியைக் கலைத்துவிட்டு, கட்சி உறுப்பினர்களுடன்மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.

எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள புதிய தமிழகமும் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்த பின், எந்தெந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணிஅமைத்துள்ளன, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்த விவரம் வெள்ளிக்கிழமை மாலைஅறிவிக்கபப்படும் என்று கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுகடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தொடர்பான விவரம் எதுவும் எனக்குதெரியாது.

அதிமுக அணியிலிருந்து வெளியேறியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியை எங்கள் கூட்டணிக்கு வருமாறு நாங்கள்அழைக்கவில்லை. அவர்களும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது கட்சி தலைமை எடுத்த முடிவு. சோனியா காந்திசொன்னதன் பேரிலேயே காங்கிரஸ் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றாலும் அவர்களுடனான நட்புறவு தொடர்கிறதுஎன்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற