அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது மார்க்சிஸ்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த கூட்டணியிலிருந்துவெளியேறியது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி தனித்து போட்டியிடவும் முடிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களைஒதுக்குவது தொடர்பாக அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி.

உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட அளவு இடங்கள் ஒதுக்கபடாததால் அதிமுக கூட்டணியிலிருந்துவிலகி தனித்து போட்டியிடப் போவதாக நேற்று (வியாழக்கிழமை) இரவு அக்கட்சி அறிவித்தது.

உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிடும் 25 மாவட்ட வேட்பாளர்கள் பெயர்களை கொண்ட முதல்வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்சங்கரையா கூறுகையில்,

கடந்த 11ம் தேதி முதல் அதிமுகவுடன் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஆனால் இதுவரை எந்த விதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

எனவே வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடவிருக்கும் 25 மாவட்டவேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறோம்.

எங்கள் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தாலும் கூட, அதிமுகவுடன் இடஒதுக்கீடு தொடர்பாக நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற