காங்கிரஸ் தலைமையில 10 கட்சி கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைமையில் 10 கட்சிகளை உள்ளடக்கிய 3வது கூட்டணி நேற்று(வெள்ளிக்கிழமை) உருவானது.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம், புதிய தமிழகம்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் தமிழ் தேசம் கட்சி நடத்தி வரும் மாஜி மந்திரிகண்ணப்பன், முதலியார் அமைப்பு நடத்தி அதை புதிய நீதிக் கட்சியாக பெயர் மாற்றியஏ.சி.சண்முகம் ஆகியோர் இதில் அடங்கியுள்ள முக்கிய தலைவர்கள்.

அடுத்தமாதம் (அக்டோபர்) மாதம் 16 மற்றும், 18 ம் தேதிகளில் இரண்டு கட்டமாகதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க,எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த சட்டசபைதேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக இணைந்து போட்டியிட்டவிடுதலை சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் தற்போதுஇந்த கூட்டணியில் இடம் பெறவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக கூட்டணியிலிருந்து விலகிய பா.ம.க. மீண்டும்திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவை உள்ளன. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடமுடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவு செய்து 3வது கூட்டணி அமைத்துள்ளது. இந்தக்கூட்டணியில் 10 கட்சிகள் இணைந்துள்ளன.

திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவை காங்கிரஸ் கூட்டணியில்இணைந்துள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலின் போது தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியை துவங்கியகுமரி அனந்தன் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான 3வது கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள்:

ஜாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை, புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம், புதியநீதிக்கட்சி, முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தாயக மக்கள் கட்சி, பாரதிய கிறிஸ்துவ கட்சி,விஸ்வகர்மா முன்னேற்றப் பேரவை, அம்பேத்கார் விடுதலை இயக்கம் ஆகியவை.

கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாசெய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள விடுதலைசிறுத்தைகள் அமைப்பையும் 3வது அணியில் இணைப்பது குறித்து அந்த அமைப்பின்நிறுவனர் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.


மேலும் சில சிறிய கட்சிகளும் எங்களுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சனிக்கிழமை முடிவு அறிவிக்கப்படும்.

3வது அணியில் இணையுமாறு மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாங்கள் அழைப்புவிடுவிக்கவில்லை.அவர்களும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற