காங்கிரசுடன் கூட்டணி இல்லை: மதிமுக திட்டவட்ட அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்இணைந்து போட்டியிடும் வாய்ப்பே இல்லை என்று மதிமுக அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தமிழக உள்ளாட்சிதேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இதில் திமுக ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும், காங்கிரஸ் தலைமையில்3வது அணியும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ்தலைமையிலான 3வது அணியில் மதிமுக இணைந்து போட்டியிடுமா என்றுமதிமுகவின் பொருளாளரும் மத்திய அமைச்சருமான கண்ணப்பனிடம்செய்தியாளர்கள் கேட்ட போது அதற்கான வாய்ப்பே கிடையாது என்றுதிட்டவட்டமாக கூறினார்.

மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், தமிழகத்தில் திமுகதலைமையிலான கூட்டணியில் அது இடம் பெறவில்லை. கடந்த சட்டசபைதேர்தலிலும் மதிமுக தனித்தே போட்டியிட்டது.

வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான 3வதுஅணியில் மதிமுக இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பே கிடையாது என்றுமதிமுகவின் பொருளாரும் மத்திய அமைச்சருமான கண்ணப்பன் கூறினார்.

அவர் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரசுடனும்கூட்டணி கிடையாது. காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள சிதம்பரம்தலைமையிலான காங்கிரஸ் ஜனநாயக பேரவையுடன் இடஒதுக்கீடு செய்துகொள்வதற்கான வாய்ப்பும் இல்லை.

சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் மதிமுகவேட்பாளர்கள் போட்டியிவில்லை. அதே நிலை இப்போது தொடர வேண்டும் என்றுபா.ஜ.க விரும்பினால் இது குறித்து அவர்கள் அந்தந்த மாவட்ட மதிமுகதலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பின்னர் அவர் கோயம்புத்தூர் மேயர் பதவி மற்றும் கோயம்புத்தூரின் 60 வார்டுகளில்மதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற