விமான விபத்தில் முன்னாள் அமைச்சர் சிந்தியா பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கான்பூர்:

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் சிந்தியாவிமான விபத்தில் பலியானார்.

கான்பூரில் இன்று இரவு நடக்கவிருந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக சிந்தியா தனி விமானத்தில்டெல்லியிலிருந்து கிளம்பினார்.

இந்த விமானம் பகல் 12.49 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது. 1.20க்கு அது கட்டுப்பாட்டை அறையுடன்தொடர்பை இழந்துவிட்டது.

பின்னர் அது பரூக்காபாத் ரயில்வே நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விட்டது.

இவ்விபத்தில் அந்த விமானத்தில் இருந்த சிந்தியா உள்பட 10 பேரும் இவ்விபத்தில் இறந்துவிட்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற