காந்தி ஜெயந்தி: ஒயின்ஸ் கடைகள், பார்களைத் திறந்தால் நடவடிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ஒயின்ஸ் கடைகளும், பார்களும் திறக்கப்பட்டிருந்தால், அவற்றின்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் அ. அப்துல் சலாம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்று முழுவதும், சென்னையில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும்மூடப்பட்டிருக்க வேண்டும்.

சில்லறை ஒயின்ஸ் கடைகள், லைசன்ஸ் பெற்ற பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் ஆகியவை கட்டாயம்மூடப்பட்டிருக்க வேண்டும்.

மீறி அவை திறக்கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தச்செய்திக் குறிப்பில் கூறியுள்ளார் அப்துல் சலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற