சென்னை மேயர் தேர்தலில் 16 பேர் போட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநாட்சி மேயர் பதவிக்கு 16 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை மாநாட்சி மேயர் தேர்தலில் போட்டியிட கடைசி நாளான திங்கள்கிழமை காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், மதிமுகவேட்பாளர் மனோகரன் ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

வசந்த குமார் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது அவரது அண்ணனும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன்உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மனோகரன், ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.இறுதியாக மொத்தம் 16 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.அவர்கள் மு.க.ஸ்டாலின், பாலகங்கா, பலராமன், மனோகரன், வசந்தகுமார், கே.ராஜன், சக்தி கண்ணன், தேவதாஸ், தலித்குடிமகன், மாரிசாமி, பால்பாண்டி, ரமேஷ், பொன்னம்மாள், சுதர்சனன், தம்பி தேவேந்திரன், தினகரன் ஆகியோர் ஆவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற