அமெரிக்காவில் ராகுல் காந்தியிடம் எஃப்.பி.ஐ. விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகன் ராகுல் காந்தியிடம் அமெரிக்கபுலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 1 மணி நேரத்திற்கும் மேலாக துருவித்துருவிவிசாரணை நடத்தினர்.

சென்ற வாரம் பாஸ்டனிலிருந்து வாஷிங்டனுக்கு செல்வதற்காக ராகுல் காந்தி விமானநிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை எஃப்.பி.ஐ. அதிகாரிகள் வழி மறித்துசோதனை நடத்தினர்.

ராகுல் காந்தியின் பாஸ்போர்ட். விசா உள்ளிட்ட அனைத்தும்சோதனைக்குட்படுத்தப்பட்டன. ராகுல் காந்தியின் பையும் முழுமையாகசோதனையிடப்பட்டது. அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரும் ராகுல் காந்திபயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் அவரை விமானநிலையத்திலேயே உட்கார வைத்துவிட்டனர்.

ராகுல்காந்தி தான் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் என்றுகூறியதையும் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த தகவல் ராகுலின் -தா-யும். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமானசோனியா காந்திக்கு கிடைத்தது. அவர் உடனே அமரிக்காவிலிருக்கும் இந்திய தூதர்லலித் மான்சிங்கை தொடர்பு கொண்டு பேசியதாகவும், மான் சிங் கேட்டுக்கொண்டபின் ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டதாகவும்கூறப்படுகிறது.

ஆனால் மான்சிங் கேட்டுக் கொண்டதால்தான் ராகுல் காந்தி பயணத்தை தொடரஅனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரக அதிகாரிகள் கூறுகையில், சோனியாகாந்தி மான்சிங்கை தொடர்பு கொள்ளவில்லை. அமெரிக்க அதிகாரிகள் ராகுல்காந்தியை சோதனையிட்ட பின் அவரை அனுப்பிவிட்டனர் என்றனர்.

இந்தியாவில் ராஜிவ்காந்தியின் குடும்பத்தினர் அனைவரும் எஸ்.பி.ஜி. சிறப்புஅதிரடிப் படையினரின் பாதுகாப்பில் உள்ளனர். ராகுல் காந்தியை அமெரிக்கஉளவுத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது இந்திய அதிகாரிகள் மற்றும்காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஜி. பாதுகாப்பில் இருக்கும் நபர் வெளிநாடு சென்றால் அந் நாட்டுக்கு இந்தியஅரசு முன்பே தகவல் கொடுக்கும். இதனால் அந்த நாட்டு போலீசார் அவருக்குபாதுகாப்பு வழங்குவது வழக்கம்.

ஆனால், அமெரிக்காவில் ராகுல் காந்திக்கு எந்த விதமான பாதுகாப்பும்வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அரசின் பாதுகாப்பு வளையத்தில்இல்லாத ஒருவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு என்றும் அமெரிக்கஅதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து வெளிநாட்டினர்அனைவரிடமும் விசாரணை நடக்கிறது. அதேபோல ராகுல் காந்தியிடமும்சோதனையிட்டப்பட்டது. இதில் பிரச்சனை என்று எஃப்.பி.ஐ. அதிகாரிகள்கூறியுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற