புதுக்கோட்டையில் ஒரு ஏர்வாடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

ஏர்வாடியைப் போல புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஒரு மனநலக் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கும்மனநோயாடிளகள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஏர்வாடியில் உள்ள ஒரு மனநலக் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள நோயாளிகள்சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததால் ஏராளமானவர்கள் தப்பிக்கக் கூட முடியாமல் தீயில் கருகி இறந்தனர்.இந்தச் சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாத இந்தியாவையே உலுக்கியது.

இதையடுத்து மனநலக் காப்பகங்களில் நோயாளிகள் சங்கிலியால் கட்டப்படுவது சட்டப்படி தடை செய்யப்பட்டது.மேலும் ஏர்வாடி மனநலக் காப்பகங்கள் அனைத்தும் மூடவும் உத்தரவிடப்பட்டது. அங்கிருந்த மன நோயாளிகள்மன நல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

ஏர்வாடியின் சோகம் இன்னும் மறக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டி என்ற இடத்தில்உள்ள ஹஜ்ரத் பீர் சாகிப் ஒலியுல்லா தர்காவில் மனநோயாளிகள் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டுள்ள விவரம்வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது.

அவர்களுக்கு திறந்தவெளியில் அசுத்தமான முறையில்தான் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. மேலும்இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சைகள் எதுவும் அளிக்கப்படுவதில்லை.வெறுமனே தென்னை மரத்தடியில் கட்டிவைக்கப்பட்டு பரிதாபமாக உள்ளனர்.

இங்கு தமிழகம் தவிர, பாண்டிச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து கூட நம்பிக்கையின் அடிப்படையில்மக்கள் வருகிறார்கள்.

ஆனால் ஏர்வாடி சம்பவத்தையடுத்து பெரும்பாலான நோயாளிகளை அவர்களின் உறவினர்கள் அழைத்துச்சென்றுவிட்டனர்.

இருப்பினும் 6 நோயாளிகள் இன்னும் அங்கு கட்டி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் ஆண்கள், 2 பேர்பெண்கள்.

இங்கு சில சமயங்களில் நோயாளிகளுக்குள் மோதல்களும் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நடந்த மோதலில் ஒருநோயாளி மற்றொரு நோயாளி மீது சுடுகஞ்சியை ஊற்றியதால், அவரது உடல் முழுவதும் வெந்துபோய்விட்டது.பிறகு அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

அதற்குப் பிறகுதான் அங்கு நடக்கும் பிரச்சனைகள் வெளியுலகிற்குத் தெரியவந்தது. ஆனால் இதுகுறித்துபுதுக்கோட்டை மாவட்டக் கலெக்டர் கூறுகையில், ஒடுகம்பட்டியில் மனநோயாளிகள் யாரும் கட்டிவைக்கப்படவில்லை. நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களாகவே வந்து தங்கியிக்கிறார்கள்.

மனநோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதாகத் தெரியவந்தால் உடனே அதுகுறித்து நடவடிக்கை எடுப்போம்என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற