திருச்சியில் வெல்வாரா எமிலி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே மேயர் தேர்தலில்போட்டி கடுமையாக உள்ளது.

தமிழகத்தில் 6 மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 16 மற்றும்18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

திருச்சி மா-நகராட்சி மேயர் தேர்தலில் எமிலி -ரிச்சர்ட் காங்கிரஸ் சார்பில்போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் -நிர்மலா லோக-நாதன் களத்தில் உள்ளார். மொத்தம்5 பேர் களத்தில் இருக்கிறார்கள்.

திருச்சி மேயர் பதவி மகளிருக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்குஒதுக்கப்பட்டுள்ளது. 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தாலும் கூட அதிமுகவேட்பாளர் -நிர்மலா லோக-நாதன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் எமிலி -ரிச்சர்ட்ஆகியோருக்கிடையேதான் கடும் போட்டி -நிலவுகிறது. இருப்பினும் இப்போதைக்கு-நிர்மலாவின் கையே ஓங்கியுள்ளது.

எமிலி ரிச்சர்ட் திருச்சி முக்கிய புள்ளியான அடைக்கல்ராஜின் சகோதரியாவார். இதற்குமுன் ஐந்து ஆண்டு காலம் துணை மேயர் பதவியில் இருந்த எமிலி -ரிச்சர்ட் மீது திருச்சிமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது. மேயராக இருந்த புனிதவள்ளிபழனியாண்டியுடன் மோதிக் கொண்டிருப்பதிலேயே -நரத்தை அவர் செலவிட்டதாகபொதுமக்கள் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.

தனது தொகுதி வார்டு குறித்து மட்டுமே அவர் அக்கறை கொண்டிருந்தார். இவர்எப்படி பாரபட்சமின்றி மேயராக செயல்படுவார் என்று அவர்கள் கேட்கின்றனர்.

மேலும் கடந்த தேர்தலின்போது தமிழ் மா-நில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துகாங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது. அப்போது ரஜினி கொடுத்த திடீர் ஆதரவுடன்மகத்தான வெற்றியை காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் பெற்றன. ஆனால் இந்தமுறை நிலைமை தலைகீழாக உள்ளது.

திமுக மீது மக்களுக்கு புதிய வெறுப்பு தோன்றியுள்ளது. கருணா-நிதி கைது சம்பவம்முதலில் பொதுமக்களிடையே அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. ஆனால், கருணாநிதிகைது குறித்து ஜெயா டிவி ஒளிபரப்பிய கேசட் கருணாநிதி மீதான அனுதாபத்தைக்குறைத்துவிட்டது.

மேலும், ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்த விதமும் மக்களிடையே அனுதாபஅலையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எமிலியை எதிர்த்து-நிறுத்தப்பட்டிருக்கும் -நிர்மலா லோக-நாதன் விறுவிறுப்பாக ஓட்டு சேக-ரித்து வருகிறார்.எமிலி செய்த தவறுகளைக் கூறி அவர் வாக்குகளை சேக-ரிக்கிறார்.

எந்தவிதமான கெட்ட பெயரும் -நிர்மலாவிடம் இல்லாத சூழ்-நிலையில், எமிலி-ரிச்சர்டின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற