காந்தி ஜெயந்தி: சென்னையில் சைக்கிள் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசு, சைக்கிள்பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பேரணியில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடற்கரை சாலையில் துவங்கிய இந்த சைக்கிள் பேரணி, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் முடிவடைந்தது.
முன்னதாக, ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.












Click it and Unblock the Notifications