அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாய் வெளியேறிய பின்லேடன் குடும்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி சில நாட்களில் அந் நாட்டில் வசித்து வந்த ஒசாமா பின்லேடனின் குடும்ப உறுப்பினர்கள் 24 பேர் பாதுகாப்பாக வெளியேறி சவுதி அரேபியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவர்களை அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு பாதுகாப்புடன் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தது.

இது குறித்து அமெரிக்காவுக்கான சவுதி அரேபியாவின் தூதத் இளவரசர் பந்தர் பின் சுல்தான் கூறுகையில்,

ஒசாமா பின் லேடனின் உறவினர்களை பத்திரமாக சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்குமாறு சவுதி மன்னர் பாத்பின் அப்துல் அஜீஸ் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைக் கேட்டுக் கொண்டார்.

இவர்களுக்கும் பின்லேடனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தக் குடும்பம் பின்லேடனை ஒதுக்கிவைத்துவிட்டது. ஒன்றுமறியாத இந்த அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்று தான் எங்கள் மன்னர்அவர்களை காப்பாற்றினார். இருப்பினும் அமெரிக்கர்களுக்கு இருக்கும் வேதனையை எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது.

எனவே எப்.பி.ஐயின் அனுமதியுடன் அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைத்து நாங்கள் அவர்களை அழைத்துச்சென்றோம். நாங்கள் அழைத்துச் சென்ற அவர்கள் அனைவரும் அன்பானவர்கள், நல்லவர்கள்.

ஆனால் ஒசாமாவின் நடவடிக்கைகளால் அவர்களும் மன வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும்உயர் கல்வி பயின்று சிறந்த முறையில் வியாபாரத்தைக் கவனித்து வருபவர்கள்.

கடந்த 1980ம் ஆண்டு ஆப்கானில் ரஷ்யாவின் ஊடுறுவலைத் தடுக்க அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாஇணைந்து செயல்பட்டபோது நானும் பின் லேடனை நேரில் சந்தித்திருக்கிறேன்.

பின்லேடனின் சொந்த நாடு சவுதி அரேபியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற