தலிபான் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன - முஷாரப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

தலிபான் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க தலிபான் முழுமையாக மறுத்துவிட்டது.

இதனால், போரைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவருவதை அடுத்து, முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார்.

பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

"பின் லேடனை ஒப்படைக்க மறுத்ததையடுத்து, அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கும் போர் நடவடிக்கைகள் பற்றிதலிபான் அரசிடம் தெரிவித்து விட்டோம்" என்று மேலும் கூறினார் முஷாரப்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற