அக். 10ல் கூடுகிறது காவிரி நதி நீர் ஆணையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரி நதி நீர் ஆணையம் வரும் 10ம் தேதி கூடுகிறது என்று தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதை அடுத்து, காவிரி டெல்டாப் பகுதிகளில் உள்ள பயிர்கள் கருகஆரம்பித்தன. விவசாயிகளும் கலங்க ஆரம்பித்தனர்.

இந்திலையில் மேட்டூர் அணையிலிருந்த நீரின் அளவும் குறைந்து கொண்டே வந்தது. வரலாறு காணாத அளவுக்குஇங்கு தண்ணீர் குறையத் தொடங்கியதால், விவசாயிகளுடன் சேர்ந்து தமிழக அரசும் கலங்கத் தொடங்கியது.

காவிரியிலிருந்து உடனடியாகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்தை வலியுறுத்தியது தமிழகம்.ஆனால், கர்நாடகம் திறந்துவிட மறுத்தது. கர்நாடகத்தில் இருக்கும் தண்ணீர் தங்களுக்கே காணாது என்று கூறி,கைவிரித்து விட்டது.

காவிரி கண்காணிப்புக் குழுவினர் 2 மாநிலங்களுக்கும் விஜயம் செய்து, நிலைமைகளை ஆராய்ந்து, டெல்லியில்கூட்டம் கூட்டிக் கூறிய போதிலும், கர்நாடக அரசு விரித்த கையை மூடவே இல்லை.

இதனால், காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று அப்போதைய முதல்வர்ஜெயலலிதா கூறிக் கொண்டே இருந்தார். ஒருவழியாக செப்டம்பர் 22ம் தேதி காவிரி ஆணையம் கூடும் என்றுபிரதமர் அறிவித்தார்.

ஆனால், அதற்குள் ஜெயலலிதா பதவியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில்பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை உருவாகியது. இந்தப் பரபரப்பிற்கிடையே, காவிரி நதி நீர்ஆணையக் கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது.

அதன்படி, வரும் 10ம் தேதி (அடுத்த புதன்கிழமை) காவிரி நதி நீர் ஆணையம் கூடவுள்ளது. பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பன்னீர் செல்வம் டெல்லி செல்கிறார்.

பன்னீர் செல்வம் முதல்வராகப் பதவியேற்ற பிறகு, இக்கூட்டத்திற்காகத்தான் முதல் முறையாக டெல்லிசெல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற