ஜெ. மீதான வழக்குகள் வாபஸா? பதில் கூற பன்னீர்செல்வம் மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்துஅமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர்பன்னீர்செல்வம் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இது போன்ற கற்பனை கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்று பன்னீர்செல்வம்கூறினார்.

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மீது தொடரப்பட்டவழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் டான்சி வழக்கு,பிளசன்ட் ஸ்டே வழக்கு தவிர மற்ற வழக்குகளை திரும்ப பெறுவது குறித்துவிவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த முடிவுகளை ஆளுநரின் அனுமதி பெற்ற பின்னர் தான் வெளியிட முடியும்.

இந்நிலையில் தமிழக ஆளுனரான ரங்கராஜனை புதன்கிழமை தமிழக முதல்வர்பன்னீர்செல்வம் சந்தித்தது பல ஊகங்களை கிளப்பியது. அமைச்சரவை கூட்டத்தில்ஜெயலலிதா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து விவாதித்ததாககூறப்பட்டது குறித்து ஆளுனரிடம் எடுத்துக்கூற முதல்வர் சென்றிருக்கலாம் என்றுகூறப்பட்டது.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்தைச் சந்தித்தனர்.

அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிதா மீதான வழக்குகள் வாபஸ் பெறுவது குறித்துவிவாதிக்கப்ப்டடதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து முதல்வர்பன்னீர்செல்லவம் கூறியதாவது:

அமைச்சரவை கூட்டத்தில் ஜெயலலிததா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதுகுறித்து விவாதிக்கப்பட்டதா என்பது போன்ற கற்பனையான கேள்விகளுக்கு என்னால்பதில் சொல்ல முடியாது.

அமைச்சரவை கூட்டத்தில் திருப்பூரில் ரூ. 687 கோடி செலவில் குடிநீர் திட்டத்தைஅமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நகரம் நாட்டுக்கு பெரும் அன்னியசெலவாணியை ஈட்டிக் கொடுத்து வருகிறது. ஆனால், கடும் தண்ணீர் பஞ்சத்தில்சிக்கியுள்ளது.

இந்தக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த ஹட்கோ மற்றும் வேறு பலநிறுவனங்களிடமிருத்து பண உதவி பெறுவது குறித்தும் விவாதிக்குப்பட்டது.

இந்த திட்டத்திற்கு ஒரு அமெரிக்க நிறுவனம் ரூ. 125 கோடி நிதி உதவி தர முன்வந்துள்ளது. இவை குறித்துதான் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வீரப்பன் விவகாரம்:

வீரப்பனை பிடிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படையுடன் ஈடுபட்டிருந்த எல்லைபாதுகாப்பு படை வீரர்களை திரும்ப அழைப்பது குறித்து மாநில அரசுடன் மத்திய அரசுகலந்து ஆலோசித்தது. அதன் பின்பே அவர்களை திரும்ப அழைத்தது.

தமிழக அரசின் சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பட்டாலியன் போலீசார்வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு அதிரடிப்படை போலீசாருடன்இணைந்து பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்டதால் வீரப்பனைபிடிக்கும் பணியில் எந்த பின்னடைவும் ஏற்படாது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற