திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் திமுகவினருக்கு அன்பழகன் எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ள திமுகவினர் வேட்புமனுவைவாபஸ் பெறாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளர்அன்பழகன் அறிவித்துள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ததேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 24ம் தொடங்கியது. இது கடந்த திங்கள்கிழமையுடன்முடிவடைந்தது.

அனைத்து அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குதயாராகிவிட்டனர்.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட இடம் கிடைக்காத சில திமுகவினர் திமுக வேட்பாளரை எதிர்த்தும் அதன்தோழமை கட்சியினரை எதிர்த்தும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சில கழக தோழர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் அவர்களில் சிலர் திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல்செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெறவேண்டும். திரும்பபெறாவிட்டால் கழக சட்டவிதிப்படி அவர்கள் மீது ஒழுங்கு நவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில்அன்பழகன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற