தொடரும் மழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு நல்ல மழை பெய்துவருவதால் நகரின் குடிநீர்ப் பிரச்சினை பெருமளவில் தீரும் என்று நம்பப்படுகிறது.

சென்னை நகருக்குத் தேவையான குடிநீர் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்துஎடுக்கப்படுகிறது. இந்த ஏரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சென்னை புறநகரில் மட்டுமல்லாது நகரிலும் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் குடிநீர்ப் பிரச்சினை பெருமளவில் தீரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகல் நேரங்களில் பெய்யாமல் இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்வதால் இயல்பு வாழ்க்கையும்பாதிக்கப்படவில்லை என்பதால் சென்னை மக்கள் மழையை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற