தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கேரள போலீஸ் வருகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் உள்ளாட்சித் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் கேரள மாநிலபோலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

நாகர்கோவிலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சய் குமார்செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1500 போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இவர்கள் தவிர 23 சிறப்பு அதிரடிப்படை போலீஸ் படைகள், 43 ரோந்து போலீஸ்படைப் பிரிவுகளும் பயன்படுத்தப்படும்.

கேரள மாநிலத்திலிருந்து 3 பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணிக்குவரவழைக்கப்படவுள்ளனர் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற