உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் அடிதடி, கார்கள் உடைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வால்பாறை:

வால்பாறையில் பேரூராட்சி வார்டு ஒதுக்குவதில் இரு அதிமுக கோஷ்டியினர்இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 அதிமுகவினரின் கார்கள்உடைக்கப்பட்டன.

வால்பாறையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர்ஹமீது தலைமையில் ஒரு கோஷ்டியாகவும், அதிமுக ஒன்றிய செயலாளர் குஞ்ஞாலிதலைமையில் மற்றொரு கோஷ்டியாகவும் இரு கோஷ்டியாக தனித்தனியாகசெயல்பட்டு வருகின்றனர்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வால்பாறை பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும்வார்டுகளை பங்கீடு செய்து கொள்வது குறித்து இரு கோஷ்டியினரும் பேச்சு வார்த்தைநடந்தது.

வால்பாறை அருகே உள்ள டாடா கிளப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்எம்.ஜி.ஆர் தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஹமீது, அதிமுக ஒன்றியச்செயலாளர் குஞ்ஞாலி, த.மா.காவைச் சேர்ந்த ஜெபராஜ், தமிழ்நாடு முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் போது ஹமீதுக்கும், குஞ்ஞாலிக்கும் இடையே கடும் வாக்குவாதம்நடந்தது.

இந்நிலையில் ஜெபராஜ், முருகேசன் ஆகிய இருவரும் இடையே நுழைந்து பேசினர்.9வது வார்டை முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு எவ்வாறு ஒதுக்கலாம் என்றுகேட்டு வாக்குவாதம் செய்தனர்.

இந்த வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியது. இந்த தகராறில் குஞ்ஞாலியின் சட்டைகிழிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த குஞ்ஞாலியின் ஆதரவாளர்கள் ஹமீதின் காரை கல்லால்அடித்து நொறுக்கினர் இதில் கார் பலத்த சேதம் அடைந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமீதின் ஆதரவாளர்கள் குஞ்ஞாலியின் காரைஅடித்து நொறுக்கினர். மேலும், முருகேசனின் ஜீப்பையும் உடைத்தனர்.

இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் கிடைத்த போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து அமைதியை ஏற்படுத்தி, ஹமீது, குஞ்ஞாலி ஆகியோரைஅழைத்து பேசி சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த சம்பவம் வால்பாறை பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற