தி.க. குறும்பு... பா.ஜ.க. கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே திராவிடர்கழகத்தைச் சேர்ந்தவர்களின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதை பாரதீயஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் பல இடங்கள்இருக்கும்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு வேண்டும் என்றே கோவிலுக்குஅருகில் பொதுக்கூட்டம் நடத்த இடம் கேட்டுள்ளனர் திகவினர்.

அமைதியான முறையில் நடந்த விநாயகர் ஊர்வலத்தின்போது வேண்டும் என்றேமசூதி உள்ள தெரு வழியாக ஊர்வலம் செல்ல தடை விதித்தது தமிழகஅரசு. ஆனால்இப்போது கோவிலுக்கு அருகில் நாத்திகவாதிகளின் கூட்டம் நடத்த அனுமதிவழங்கியுள்ளது. இது இரட்டை வேடமாகும்.

தமிழக முதல்வர் தெய்வ நம்பிக்கை உள்ளவர். உடனடியாக அவர் தலையிட்டுபொதுக்கூட்ட இடத்தை மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற